காதலியுடன் இருந்த ஆபாச வீடியோக்களை மனைவிக்கு அனுப்பிய கணவர்.. விரக்தியில் மனைவி தற்கொலை..!
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே திட்டம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு 43 வயதாகிறது. இவருடைய மனைவி சாந்தி. இரு குழந்தைகள் உள்ள நிலையில் திடீரென சாந்தி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
ஜெய்சங்கருக்கு சின்ன பொண்ணு என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சின்ன பொண்ணுவிற்கு 5 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். இதை அறிந்த சாந்தி கணவரை கண்டித்து விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெய்சங்கர் சின்ன பொண்ணு உடன் இருந்த ஆபாச வீடியோக்களை மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
இதை பார்த்த சாந்தி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசார், ஜெய்சங்கர் மற்றும் சின்ன பொண்ணுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






