ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்கள்.. மிஞ்சியது ஏமாற்றம் தான்
தென்காசியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்ட முயற்சித்துள்ளனர்.
அதிகாலையில் சோதனை செய்ய வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்து வந்த சுரண்டை காவல் துறையினர் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முழுமையாக உடைக்க முடியாததால் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.





