அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீச்சு.. கடலூரில் 4 பேர் கைது..!
கடலூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நான்கு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவானம் பேட்டை கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் அங்கு அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
அப்பொழுது பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் பின்பக்கம் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் சுவற்றில் விழுந்து அதிக சத்தத்துடன் வெடித்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்த போது மக்கள் தொடர்ந்து அங்கிருந்து இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குள்ளஞ்சாவடி போலீசார் பெற்றோர் குண்டு வீசிய வெற்றி, கிருஷ்ணகுமார், சதீஷ், விஜயராஜ் ஆகிய நான்கு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





