அதி தீவிரமடையும் வெப்பநிலை.. தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்..!
தமிழகத்தில் இல்லை இயல்பை விட 5 டிகிரி வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் சென்னை வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 28ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் எனவும் இயல்பை விட சில இடங்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் எனவும் எச்சரித்துள்ளது.
குறிப்பாக இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் முதல் ஐந்து டிகிரி செல்சியஸ்வரர் வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





