ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மருமகன் செய்த அதிர்ச்சி சம்பவம்..!
தொழிலதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் பணத்தை மோசடி செய்த மூன்று பேரை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
300 கோடி ஏமாற்றியது எப்படி? கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழிலதிபரான அவரது அலுவலகத்தில் பணிபுரிந்த எட்டு பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடிக்கு உடந்தையாக இருந்த வசந்த் மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
இதில் முக்கிய குற்றவாளியான அஸ்வின்குமார் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரது மனைவி சீலா மகள் தீக்ஷா, மருமகன் சக்தி சுந்தர் ஆகிய மூவரை போலீசார் என்று கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து குற்றவாளிகளை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் தொழிலதிபருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் சொத்து சொத்துக்களை அபகரித்ததாக கூறப்படும் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





