--- --:--:-- --

பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் அழிப்பு..!

5

சுறா துடுப்பு, பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீயிட்டு அழித்தனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் பூச்சி மருந்து, சுறா துடுப்பு உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கப்பட்ட 446 கிலோ சுறா துடுப்பு 120 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள், 50 கிலோவுக்கு அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

 

இது தொடர்பான வழக்குகளின் விசாரணைகள் முடிவடைந்ததையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டனர். ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தின் பின்புறம் சுங்கத்துறை அதிகாரிகளும் வனத்துறையினரும் இணைந்து கடத்தல் பொருட்களை தீயிட்டு அழித்தனர்.

 

Right Menu Icon