--- --:--:-- --

லாரியின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனத்தை 2 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற கொடூரம்..!

2

ஹைதராபாத்தில் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனத்தை இரண்டு கிலோமீட்டர் வரை லாரி ஓட்டுனர் இழுத்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. ஹைதராபாத்தில் இருசக்கர வாகனம் மீது லாரி ஒன்று மோதுகிறது.

 

ஆத்திரமடைந்த இருசக்கர வாகன ஓட்டி லாரி ஓட்டுனரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார். அப்பொழுது அந்த வாகனம் சக்கரத்தில் சிக்கி உள்ளது. இருசக்கர வாகன ஒட்டி அந்த லாரியில் தொங்கியபடியே சென்றுள்ளார்.

 

இது தொடர்பாக இருசக்கர வாகன ஓட்டி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

Right Menu Icon