பாஜகவுக்கு ஆதரவாக அரசு பேருந்து ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி.. தடுத்த நடத்துனருக்கு அடி, உதை..!
நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை டவுனுக்கு புறப்பட்ட அரசு பேருந்து பாஜக பிரமுகர் மருதுபாண்டி என்பவர் பாஜகவுக்கு வாக்கு கேட்கும் ஸ்டிக்கரை பேருந்து முன் பக்க கண்ணாடியில் ஒட்ட முயன்றார்.
அதனை ஓட்டுனர் சுப்பிரமணி தடுத்ததால் ஆவேசமடைந்த மருத பாண்டி ஓட்டுனர் சுப்பிரமணியனை தாக்கியுள்ளார். அதனை தடுக்க முயன்ற பேருந்து நடத்துனர் பாஸ்கர் என்பவரையும் அவர் தாக்கியுள்ளார்.
இந்த நிலையில் பலத்த காயமடைந்த ஓட்டுனர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மருத பாண்டியை கைது செய்தனர்.






