--- --:--:-- --

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விபரீத முடிவு..!

8

தேனி மாவட்டம் சின்னமனூரில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சவட்டி வீரன் கூலி வேலை செய்து வருகிறான்.

 

இவரது வீடு காலையிலும் பெருக்கப்படாமல் இருந்தால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர். அப்பொழுது தாய் தந்தை மகனாகிய மூவரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

மருத்துவர்கள் பரிசோதனையில் மூவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon