கோவையில் ஈபிஎஸ்சை வெளுத்து வாங்கிய கனிமொழி..!
தேர்தல் பரப்புரையில் இதுவரை பிரதமர் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறாரா என்று கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை துடியலூரில் திமுக வேட்பாளர் ஆதரித்து கனிமொழி பரப்புரையில் ஈடுபட்டார். அப்பொழுது பேசியவர் பாஜக பொய் செய்திகளை பரப்பி மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை எனக் கூறினார்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எனக்கூறியவர் ஒருவேளை இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்தியாவில் நடக்க இருக்கும் கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





