அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதம்..பயணிகள் அச்சம்..!
உத்திரமேரூரில் இயக்கப்படும் அரசு பேருந்து கம்பி மற்றும் பிளைவுட் சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் போக்குவரத்து பணிமனையில் 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் உள்ளன.
இந்த பணிமனையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பேருந்து சேதமடைந்துள்ளதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
பயணிகள் கைப்பிடிக்கும் கம்பியருகே இரண்டு இடங்களில் உடைந்து கூர்மையாக உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





