--- --:--:-- --

ரூ.500 நோட்டில் படுத்து உருண்ட புகைப்படத்தால் பாஜகவினர் அதிர்ச்சி..!

8

அசாமில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சி உறுப்பினர் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கட்டிலில் படித்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தலில் பரப்பரை சூடு பிடித்த நிலையில் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி வைத்துள்ளது. இந்த நிலையில் யூபிபிஎல் கட்சி உறுப்பினர் பெஞ்சமின் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் கடலில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்த விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon