மதுரையில் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!
மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பொழுது பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது பிரத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சம்பவத்தை தொடர்ந்து மதுரையில் சிறுமி கொலை செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





