--- --:--:-- --

பலியாடாக ஆகுவது கவலை தருகிறது.. கர்நாடகா முன்னாள் முதல்வர் வேதனை..!

5

நெல்லை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான கார்த்திகேயன் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான படிவம் 2a மற்றும் பிரமாண பத்திரம் படிவம் ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்க உள்ள நிலையில் அலுவலக நேரங்கள், வேட்பு மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் ஆர்வமுடன் அரசு அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை இலவசமாக பெற்று செல்கின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் எம்எல்ஏ அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் கட்சி சார்ந்த பெயர் பலகைகளை மறைப்பது சுவர் விளம்பரங்களை வண்ணம் தீட்டி அளித்தனர். முக்கிய அரசியல் தலைவர்கள், கல்வெட்டு, பெயர் பலகைகளை தேர்தல் அலுவலர்கள் மறைத்தனர்.

 

தெரிந்து சங்கடப்படுத்துவதும், பலியாடாக ஆக்குவதும் தனக்கு கவலை அளிப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக எம்பியுமான சதானந்தா கவுடா கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்காததை தொடர்ந்து தனது மனக்குமுறலை அவர் வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon