--- --:--:-- --

மார்ச் 22ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் தொடக்கம்..!

6

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 22ஆம் தேதியும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 24ஆம் தேதி தேதியும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 19ஆம் தேதி ஜூன் 1ம் தேதி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

 

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

 

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 22ஆம் தேதி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். திருச்சி அருகே சிறுவனூரில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தனது பரப்புரையை தொடங்க உள்ளார்.

 

Right Menu Icon