தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகரிக்கும் வெப்பம்..!
தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 21ம் தேதி வரை வறண்ட வானிலையை நிலவும் என்றும் தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் வெயில் காரணமாக அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






