எலைட் மதுபான கடையில் காலாவதியான மதுபானங்கள்..!
காஞ்சிபுரத்தில் எலைட் மதுபான கடையில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை செய்ததால் ஆத்திரமடைந்த மது பிரியர்கள் மதுபான கடை ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் அருகே எலைட் மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
இந்த மதுபான கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபானம் காலாவதியாக இருந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மதுபான கடை ஊழியரிடம் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனாலும் மதுபான கடை ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரம் அடைந்த மது பிரியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.






