--- --:--:-- --

திமுக உடன் மநீம கூட்டணி ஏன்? வீடியோ மூலம் விளக்கம் அளித்த கமல்ஹாசன்

6

திர்கட்சிகளுக்கு கைகூடி விடக்கூடாது என்பதற்காக திமுகவுடன் கைகோர்த்துள்ளதாக வீடியோ மூலம் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது.

 

இதில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என கூறப்பட்டு வந்தது. ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என கமல்ஹாசன் அதிரடியாக அறிவித்தார்.

 

ஆனால், திமுக கூட்டணிக்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்காக பரப்புரை மேற்கொள்வேன் என தெரிவித்தார். மக்களைவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு தொகுதி ஒதுக்கப்படாத நிலையிலும், திமுக சார்பில் ஒரு மாநிலங்களவை இடம் கமல்ஹாசன் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிலையில், திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளதற்கான காரணம் குறித்து கமல்ஹாசன், தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு விளக்கம் அளித்துள்ளார்.

 

அதில், தேச நலனுக்காக திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த நிலை ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். எதிர்வாத சக்திகளுக்கு இது கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்த முடிவு என்று கமல் தெரிவித்துள்ளார்.

 

அத்துடன், இந்த அரசியலை மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பை உங்களுக்கு அளித்திருக்கிறது சரித்திரம் என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், இந்த நேரத்தில் அனைவரும் சகோதரர்கள் தான். எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் தனது சகோதர்ரகள் தான் என குறிப்பிட்டுள்ளார்.

 

தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரு மேடையில் அமர வேண்டும். அது தான் தனது அரசியல் என்று, திமுக உடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துள்ளது தொடர்பாக கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

Right Menu Icon