--- --:--:-- --

கேரளாவுக்கு நூதன முறையில் அரிசி கடத்தல்..!

9

கேரளாவுக்கு நூதன முறையில் கடத்த முயன்ற ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குமரி மாவட்டம் அதிகாரி சுனில்குமார் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை ரேஷன் பொருட்கள் வழங்கும் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் நூதன முறையில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்டது கண்டறியப்பட்டது. சோதனையின் பொழுது வாகன ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

 

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வாணிப கழகம் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Right Menu Icon