ஹோட்டல் குடிநீரில் ட்ரம்மில் செத்து மிதந்த எலி..!
தாம்பரத்தில் உள்ள உணவகத்தில் தண்ணீர் ட்ரம்முக்குள் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலைய கால் டாக்ஸி டிரைவர் ஆன பாக்யராஜ் தாமரை மடத்தில் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தண்ணீரை எடுத்துக் குடித்துள்ளார்.
அப்பொழுது தண்ணீர் டிரம்முக்குள் எலி ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உரிமையாளிடம் கூறியுள்ளார். இதனையடுத்து உரிமையாளர் மன்னிப்பு கேட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி உணவகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.






