--- --:--:-- --

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..!

9

ளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். நடப்பாண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டிற்கான நீட் நுழைவு தேர்வுக்கு இதுவரை சுமார் 21 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஆன்லைனில் ஓடிபி பெற முடியாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

 

இதையடுத்து தேசிய தேர்வு முகமை அந்த பிரச்சனையை சரி செய்தது. கடந்த ஆண்டு 20.87 லட்சம் விண்ணப்பித்திருந்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் 20 ஒரு லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon