--- --:--:-- --

உயிரோடு உள்ளே சென்று பிணமாக வெளியே வந்த ஓட்டுனர்.. வெடித்த போராட்டம்..!

5

சங்கரன்கோயிலில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேன் ஓட்டுநர் போலீசார் தாக்கிய உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மதுபோதையில் டூரிஸ்ட் வேன் ஒன்று ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அதன் ஓட்டுனர் முருகன் என்பவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு வேன் ஓட்டுநர் முருகன் மர்மமான முறையில் உயிரிழ்நததாக கூறப்படுகிறது.

 

அவரது உறவினர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு முருகனின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon