--- --:--:-- --

திமுக காரன் ஒட்டு போட்டதால் தான் ஜெயிச்ச.. காங்கிரஸ் – திமுகவினர் இடையே மோதல்..!

6

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏவை சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக நகராட்சி தலைவரால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறையில் மகளிர் கலை கல்லூரி பின்புறத்தில் பள்ளி நூலகத்தை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

 

இதில் மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அங்கு வந்த திமுக நகராட்சி தலைவர் கட்டட ஒப்பந்ததாரர்களிடம் கடும் வாக்குவாதம் செய்தார்.

 

எம்பி, நகராட்சி தலைவர், கவுன்சிலர் என யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் எப்படி வேலையை தொடங்கலாம் என கேள்வி எழுப்பினார். மேலும் நீ எப்படி இங்கு வந்த திமுக ஓட்டு வாங்கி தான் நீ ஜெயிச்சா எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon