காவல்துறை முழு விவரங்களையும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு..!
தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவர்களில் எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர், எத்தனை வழக்குகள் விசாரணையில் நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா, அவர்களை மீட்க காவல்துறையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பான முழுமையான அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




