மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்கப்படும் ..!
வரும் கல்வியாண்டில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே வங்கி கணக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகை பள்ளிகளிலும் 2024 – 2025 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியின் வழியாகவே வங்கி கணக்குகள் துவங்க ஏற்பாடு செய்யப்படும் என்று பள்ளிகளிலேயே ஆதார் பதிவு புதுப்பித்து வங்கி கணக்குடன் இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கல்வி உதவித்தொகை பெற பள்ளிகள் வழியே விண்ணப்பிக்கலாம் எனவும் ஜாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் இருப்பிடம் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்களும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





