--- --:--:-- --

கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் உயிரிழப்பு..!

7

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் அலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் மாயமான மேலும் 4 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

ஆந்திராவில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 30 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பத்து மாணவர்கள் கடல் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.

 

மீனவர்கள் உதவியுடன் ஐந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் விஜய் என்ற மாணவன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து மாயமான நான்கு மாணவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon