--- --:--:-- --

மேயர் பிரியா சென்ற கார் லாரி மோதி விபத்து..!

2

சென்னை மாநகராட்சி பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. காஞ்சிபுரம் மாவட்டம் செல்லை குப்பம் அருகே சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரியாவின் கார் சென்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது முன்னாள் சென்ற கார் திடீர் என திரும்பிய நிலையில் அதன் மீது மேயர் கார் மோதியுள்ளது. இதற்கிடையே பின்னால் வந்த லாரி மோதியதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மேயர் பிரியா நல்வாய்ப்பாக உயர்த்தப்பினார்.

 

விபத்தில் சிக்கிய கார் சேதமடைந்த நிலையில் மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு மேயர் பிரியா அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

 

விபத்து தொடர்பாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மின் விளக்குகளில் எரியாத காரணத்தினால் இது போன்ற விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

Right Menu Icon