காரை திருட வந்தவன் கண் அசந்து தூங்கியதால் அதிர்ச்சி..!
காரை திருட வந்த நபர் போதையில் காருக்குள்ளையே தூங்கிய சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அரங்கேறி உள்ளது. ஹரியானா மாநிலத்தில் ரவி என்பவர் 20ம் தேதி இரவு தனது காரை வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார்.
காலையில் காரை சுத்தம் செய்வதற்காக வந்த பொழுது காரின் கதவு உடைக்கப்பட்டு காருக்குள் அந்த நபர் தூங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசுக்கு அவர் தகவல் அளித்தார்.
அந்த நபரிடம் விசாரணை நடத்தி கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் காரை திருடி வந்ததாகவும் போதையில் காருக்குள்ளையே உறங்கியதாக தெரிவித்தார். அவரிடம் இருந்த போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





