அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி உணவில் பூரான்.. மாணவர்கள் அதிர்ச்சி..!
அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் உணவில் பூரான் கிடந்ததாக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் மதிய உணவு உண்ணும் போது தட்டில் பூரான் இருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
தொடர்ந்து பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மாணவர்கள் தகவல் தெரிவித்தனர். இந்த அதிகாரிகள் கல்லூரி விடுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விடுதி சுத்தம் இல்லாமல் இருந்தது ஆய்வின் போது தெரியவந்தது.
தொடர்ந்து இரவு உணவு செய்வதற்கு முன்பாக விடுதி சமையலறை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் சமையலறை சுத்தம் செய்த பின்னரே உணவு சமைக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





