--- --:--:-- --

மனைவியின் போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்த கணவன் கைது..!

11

புதுச்சேரியில் மனைவியின் புகைப்படத்தை செல்போனில் இணையதளத்தில் வெளியிட்டு தீய நோக்கத்துடன் பதிவிட்ட கணவர் சிறையில் அடைக்கப்பட்டார். புதுச்சேரியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கு காளிதாஸ் என்பவருடன் கடந்த 2021ல் திருமணம் நடைபெற்றது.

 

கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது புகைப்படம் மற்றும் செல்போன் எண்ணை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்துடன் பதிவிட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரி கணவர் காளிதாஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon