தன்னை ஏமாத்தி கல்யாணம் செய்ததாக தர்ணாவில் ஈடுபட்ட பெண்..!
சேலத்தில் பெண் ஒருவர் காவல்துறையினர் வாகனம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தின் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்ற பெண்ணின் கணவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் அவர் இரண்டாவதாக பாஸ்கர் என்று அமெரிக்க வாழ் தமிழரை மறுமணம் செய்து கொண்டார்.
இவர் மனைவியை இழந்த நிலையில் ஆர்த்தியை மறுமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாஸ்கரன் பொய் கூறி தன்னை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டிய அவர் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தை சீர் செய்ய வழக்கறிஞரிடம் பாஸ்கர் கூறிய பொழுது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் அவரை அழைத்து செல்ல ஆர்த்தி காவலர் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





