விடுமுறை தினத்தில் வங்கியில் ஒலித்த அலாரத்தால் மக்கள் அதிர்ச்சி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் விடுமுறை நாளான இன்று திடீரென அலாரம் ஒலித்ததால் திருடன் புகுந்து இருக்கலாமோ என மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த வங்கி அதிகாரிகள் உள்ளே சென்ற பொழுது மின் கசிவால் தாமாக அலாரம் அடித்ததை கண்டு சரி செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





