--- --:--:-- --

காவலரின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குண்டு.. காவலர் பலி..!

9

சத்தீஸ்கரில் ஓடும் ரயிலில் எதிர்பாராமல் துப்பாக்கி வெடித்ததில் போலீஸ் ஒருவர் பலியாகி உள்ளார். அதில் ஒரு பயணியும் காயமடைந்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

 

அப்பொழுது ரயில்வே போலீசார் கையிலிருந்த துப்பாக்கி எதிர்பாராத விதமாக வெளியேறிய தோட்டா தினேஷின் மார்பில் பாய்ந்தது. மேலும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த முகமது என்பவரின் மீது தோட்டா பாய்ந்ததில் படுகாயம் ஏற்பட்டது.

 

உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காவலர் சிகிச்சை பலனின்றி பலியானது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon