--- --:--:-- --

ராமாயண காட்சிகளை இழிவாக நடித்துக் காட்டிய மாணவர்கள்..!

2

ராமாயண காட்சிகளை அரங்கேற்றுவதாக கூறி மத உணர்வை புண்படுத்திய புகாரில் புனே பல்கலைக்கழகத்தின் மாணவரும் பேராசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா கழகத்தின் நடைபெற்ற விழா ஒன்றில் ராமாயண காட்சிகள் அரங்கேற்றப்பட்டன.

 

அப்பொழுது சீதா தேவியாக நடித்தவர் புகைபிடித்தது போன்ற காட்சியும் ராமர் கதாபாத்திரத்தில் நடித்தவர் புகை பிடிக்க நெருப்பு வழங்கும்படியான காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அங்கிருந்த மாணவர்கள் எழுந்து நின்று கோஷம் இட்டுள்ளனர்.

 

காவல்துறையினர் இந்த நாடகத்தை அரங்கேற்றிய ஐந்து மாணவர்களையும் இது தொடர்புடைய பேராசிரியர் ஒருவரையும் கைது செய்தனர். இதையடுத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைக்கழக வழக்கத்தில் பதற்றம் ஏற்பட்டது.

 

இதை தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த பூனே நீதிமன்றம் கைது செய்யப்பட்ட பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

 

Right Menu Icon