--- --:--:-- --

அப்பாவின் பேச்சை மீறி திருமணம்.. இரண்டே ஆண்டில் கணவரை பிரிந்த ராஜ்கிரணின் மகள்..!

11

பிரபல நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளான பிரியா, வீட்டை விட்டு வெளியேறி நடிகர் முனிஷ் ராஜாவை ரகசிய திருமணம் செய்துகொண்டார்.

 

நடிகர் முனிஷ் ராஜா, சன் டிவில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலம் ஆனவர். அதன் பின் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முனிஷ் ராஜா- பிரியா திருமணத்திற்கு ராஜ்கிரண் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்கிரணும் தன்னுடைய அதிருப்தியை சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில் பிரியா வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், “நான் கடந்த 2022 -ம் ஆண்டு முனிஷ் ராஜாவை திருமணம் செய்தேன். மீடியா மூலமாக அந்த திருமணம் பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கும். எங்களுடைய திருமணம் சட்டபூர்வமானது இல்லை”.

 

“இப்போது நாங்கள் பிரிந்து விட்டோம். இந்த திருமணத்தால் என்னை வளர்த்த என் அப்பாவை மிகவும் காயப்படுத்திவிட்டேன். அதுவும் நிறைய வாட்டி. இருப்பினும் அவர்கள் என்னைத் தாங்கிப் பிடித்தார்கள். நான் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அது பத்தாது” என்று பிரியா கூறியுள்ளார்.

Right Menu Icon