பள்ளி நீச்சல் குளத்தில் விழுந்து 5 வயது சிறுவன் பலி..!
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளியின் அருகே உள்ள நீச்சல் குளத்தில் ஒன்றாம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி உணவு இடைவெளியின் பொழுது அருகில் இருந்த நீச்சல் குளத்தில் ஐந்து வயது சிறுவன் தவறி விழுந்தது தெரிய வந்துள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் இந்த விபத்து நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





