திருவல்லிக்கேணியில் முதியவரை முட்டி தூக்கிய மாடு..!
சென்னை திருவல்லிக்கேணியில் மாடு முட்டும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த முதியவர் கன்னியப்பன் அதிகாலை வாக்கிங் சென்றபொழுது பின்னால் வந்து மாடு முட்டியதில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில் திருவல்லிக்கேணியில் தொடர்ச்சியாக 4க்கும் மேற்பட்ட மாடு முட்டும் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் பலமுறை புகார் அளித்த மாநகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சாலையில் நடக்கவே பயமாக உள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





