காதல் தோல்வியால் எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரை விட்ட காதலி..!
திருச்சி அருகே காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட நர்சிங் மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் பேட்டை வாய்க்கால் அருகே உள்ள ஊரைச் சேர்ந்த நர்சிங் மாணவியும், ஆகாஷ் என்ற அர்ஜுனும் காதலித்தவர்களாக கூறப்படுகிறது. இருவரும் சுற்றுலா தளங்களுக்கு செல்வது புகைப்படம் எடுப்பது என நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னுடன் பேசுவதை தவிர்த்ததால் விரக்தி அடைந்த மாணவி வயிற்று வலியால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதலன் தொடர்பை துண்டித்ததால் எலி பேஸ்ட் சாப்பிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
காதலனால் இரண்டு முறை கர்ப்பமானதாகவும் காதலன் அர்ஜுன் ஏமாற்றியுள்ளதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் அர்ஜுனை கைது செய்ய வலியுறுத்தி மாணவியின் உடலை வாங்க மறுத்து அந்த உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





