--- --:--:-- --

அதிர்ந்த அண்ணாமலை..போராட்டத்தில் குதித்த பத்திரிகையாளர்கள்!

6

செய்தியாளர் சந்திப்பில் தனியார் தொலைக்காட்சி நெறியாளரை தரக்குறைவாக விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் கடந்த 19 ஆம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கு கொடுத்த நேர்காணலில், அவர் கூறி கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை தெரிவித்த ஒப்பீடு பத்திரிகையாளர்கள் பலரை கொந்தளிப்படைய வைத்தது. பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளும் சங்கங்களும் அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்தன.

 

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “பொது வெளியில் பேசும்போது, சாதாரண பொதுமக்கள் கூட பேசத் தயங்கும் கேவலமான வார்த்தைகளை அண்ணாமலை மிகச் சாதாரணமாக பேசியுள்ளார். அதுவும் பத்திரிகையாளரை குறிப்பிட்டு அவ்வாறு பேசியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களிலும் பத்திரிகையாளர்கள் குறித்து அண்ணாமலை தெரிவித்த கேவலமான கருத்துகளுக்கு இதுவரை அவர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத நிலையில், தற்போது மிகவும் தரம் தாழ்ந்து மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.

 

அண்ணாமலையின் இந்த இழிவான நடவடிக்கைகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து கண்டித்து வருகின்றது. ஒருமுறை, அமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கே சென்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், அண்ணாமலையின் இந்த தரங்கெட்ட தொடர் செயல்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலில், சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த புகார் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலில் அண்ணாமலை அளித்துள்ள பதிலிலும், பிரஸ் கவுன்சிலை அவமதிக்கும் வகையிலும், எதற்காக புகார் அளிக்கப்பட்டதோ அதை உறுதிப்படுத்தும் வகையிலும், வாய்க்கு வந்த வகையில் உளறிக்கொட்டியுள்ளார். இவ்வாறு நாம் கொடுத்த புகாருக்கான ஆதாரத்தை தன்னுடைய பதில் அறிக்கையின் மூலம் அண்ணாமலையே கொடுத்திருக்கும் நிலையிலும், மாதங்கள் பல கடந்தும் இந்திய பிரஸ் கவுன்சிலில் நமது புகார் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில்தான் பத்திரிகையாளர்களிடம் மீண்டும் தரம் தாழ்ந்து நடந்துள்ளார் அண்ணாமலை.

 

Right Menu Icon