--- --:--:-- --

தொப்பூர் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி

1

தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வாகனங்கள் தீப்பிடித்து எறிந்ததில் நான்கு பேர் உயிரிழப்பு, மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயங்களுடன் சேலம் மற்றும் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பெங்களூரு- சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் சாலை இரட்டை பாலம் அருகே மூன்று லாரி மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான. இதில் நெல் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி, இரண்டு கார்கள் மீது மோதி கவிழ்ந்து தீப்பற்றி எரிந்தது. மற்றொரு லாரி இரட்டை பாலத்தை உடைத்து கொண்டு கீழே விழுந்து நொறுங்கியது.

 

இந்த கோர விபத்தில் இரண்டு லாரிகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். காரில் இருந்த மேலும் 4 பேர், லாரி ஓட்டுநர்கள் என 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் சேலம் மற்றும் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.கஸ்டாலின் 4 பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon