--- --:--:-- --

ஆதார் அட்டையால் இனி இந்த யூஸ் கிடையாது..!

4

பிறந்த தேதிக்கான ஒப்புதல் டாக்குமெண்ட்களுக்கான பட்டியல்களில் இருந்து ஆதார் அட்டையை நீக்கி இருப்பதாக எம்பிளாயீஸ் பிராவிடண்ட் ஃபண்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

இதனால் ஒரு அக்கவுண்ட் ஹோல்டர் தன்னுடைய பிறந்த தேதியை அப்டேட் செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ நினைத்தால் அதற்கு ஆதார் அட்டையை இனிவரும் நாட்களில் ஒப்புதல் ஆவணமாக பயன்படுத்த முடியாது. இது குறித்து நிறுவனம் ஒரு சுற்று அறிக்கையை வெளியிட்டுள்ளது.“இதன் தொடர்பாக, UIDAI -இல் இருந்து ஒரு கடிதம் பெறப்பட்டுள்ளது.

 

அதில் பிறந்த தேதிக்கான ஒப்புதல் ஆதாரமாக இருக்கக்கூடிய ஆதாரை ஏற்கப்படக்கூடிய டாக்குமெண்ட்களின் பட்டியல்களில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,” இவ்வாறு ஜனவரி 16 ஆம் தேதி அன்று வெளியான EPFO சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஆதார் அட்டையில் ஒரு நபரின் பெயர், முகவரி மற்றும் பயோமெட்ரிக் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும். ஆதார் அட்டையை அடையாள சான்றிதழ் மற்றும் முகவரி சான்றிதழாக பயன்படுத்தலாம் என்பதை UIDAI தெளிவுபடுத்தி உள்ளது. ஆனால் பிறப்பு சான்றிதழாக அது செல்லுபடி ஆகாது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

Right Menu Icon