2 ரூபாய் டிக்கெட்டை 10 ரூபாய்க்கு கொடுத்த நடத்துனர்..!
ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு சிற்றுந்து பேருந்துகள் மாநகரப் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மேலகவுண்ட பாளையத்திற்கு இயக்கப்பட்ட சிற்றுந்து ஒன்றில் பயணி ஒருவர் ஏறி உள்ளார்.
அப்பொழுது ரயில் நிலையம் வரை செல்ல பயணி சீட்டு கேட்டுள்ளார். அப்பொழுது பத்து ரூபாய் பயண கட்டணமாக பெற்றுக்கொண்டு இரண்டு ரூபாய் மதிப்புள்ள டிக்கெட் வழங்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணி நடத்துனரிடம் கேட்டுள்ளார்.
இருப்பினும் முறையாக பதில் வழங்காததால் தனது மொபைலில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





