--- --:--:-- --

ஆளுநர் பதிவிட்ட திருவள்ளுவரின் போட்டோவால் சர்ச்சை..!

6

சர்ச்சைக்கு பெயர் போன ஆளுநர் ரவி, காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்து தனது வாழ்த்துரையை பதிவிட்டு புதிய சர்ச்சை உருவாக்கியுள்ளார். திருவள்ளுவர் தினத்தை ஒட்டி நெற்றியில் திருநீருடன் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை ஆளுநர் ரவி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

 

ஆன்மீக பூமியான தனது தமிழ்நாட்டில் பிறந்த பெரும் புலவரும் சிறந்த தத்துவ ஞானிகள் சனாதன பாரம்பரியத்தின் துறவியும் ஆன திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

திருவள்ளுவரின் ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து வல்லப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்திற்கு வழிகாட்டியாகவும் வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது என்று தெரிவித்துள்ள ஆளுநர் ரவி இந்த புனிதமான நாளில் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon