நாளை சென்னையில் இதற்கு அனுமதி இல்லை..!
காணும் பொங்கலையொட்டி மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என்று மணல் பரப்பில் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
காணும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகள் குறித்து சென்னை காவல்துறை சார்பில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பேசிய கூடுதல் ஆணையர் பிரேமா சென்னை முழுவதும் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் என்றும் கடற்கரைக்கு இரவு 10 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை என தெரிவித்தவர் பொதுமக்கள் கடலில் குளிப்பதை தடுத்து காவல்துறையின் கட்டுப்பாட்டுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





