--- --:--:-- --

மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு இல்லை.. நடிகை நயன்தாரா

1

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் தான் நடிகை நயன்தாரா. ஹீரோயின் சென்ரிக் படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, சமீபத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து அழகு சாதன பொருட்கள் விற்கும் ‘9 ஸ்கின்’ என்ற நிறுவனத்தை கடந்த ஆண்டு தொடங்கினர்.

 

அதனை அடுத்து Femi 9 என்ற சானிடரி நாபிகின் பொருட்களை அறிமுகப்படுத்தினார்கள். சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நயன்தாரா, “முன்பெல்லாம் சானிடரி நாபிகின் என வெளியில் சொல்வதற்கே தயங்கிட்டு இருந்தோம். ஆனால் இப்போது தைரியமாக நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம் என கருதுகிறேன்”.

 

“மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு, இன்னும் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணிற்கும் போய் சேரவில்லை என்று நான் நினைக்கிறேன்.ஃபெமி 9 நிறுவனத்தின் நோக்கமே மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே ஆகும” என்று நயன்தாரா பேசியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon