11ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் செலுத்தப்படும் – புதுச்சேரி
பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதிலாக 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தும் கோப்புக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை செயலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடிமை பொருள் வழங்கலாம்.
அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு ஈடாக 500 ரூபாய் வழங்குவது தொடர்பான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் அனைத்து ரேஷன் கார்டு தாரருக்கும் 10 மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு ஈடான தொகை 500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





