--- --:--:-- --

நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு.. போலீசார் மீது மாட்டுச் சாணத்தை கரைத்து ஊற்றிய தாய் மகள்..!

7

நல்லம்பள்ளி அருகே நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்புக்கு சென்ற போலீசார் மீது பெண்கள் மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கண்டுக்காரம்பட்டியில் சாலமா என்பவருக்கு சொந்தமாக 85 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலம் சந்து பொந்தாக சாலமாவுக்கும் அவரது அக்கா முனியம்மாளுக்காகவும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் சாலமா? தனது நிலத்தை சர்வேயர் மூலம் அளவீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி விஏஓ ஆகியோர் தோப்பூர் போலீசார் பாதுகாப்பு நிலத்தை அளவீடு செய்ய சென்றனர். அப்பொழுது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தாயும் மகளும் மாட்டு சாணத்தை கரைத்து போலீசார் மீது ஊற்றினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon