லைக்குக்காக பண்ணிட்டேன்.. பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்..!
குற்றாலத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதனை இன்ஸ்டா கிராமில் வெளியிட்டு வந்த இளைஞர்களை போலீசார் கண்காணித்து வந்தனர். மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபட்ட சுலைமான், முகமது, மணிகண்டன் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர். மீண்டும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் கைது செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





