--- --:--:-- --

ஓட்டுனர் உடன் நடத்துனர் செயல்முறை தேர்வு இன்று முதல் நடைபெற உள்ளது..!

4

ரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் ஓட்டுநருடன் நடத்துனர் பணிக்கு இன்று முதல் செயல்முறை தேர்வு நடைபெற உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துனர் பதவிக்கான 685 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்றது.

 

10 மாதங்களின் நடைபெற்ற தேர்தலில் 9,359 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு செயல்முறை தேர்வுக்கான அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

 

அதன் படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநருடன் நடத்துனர் பணிக்கு இன்று முதல் செயல்முறை தேர்வு நடைபெற உள்ளது. சென்னை குரோம்பேட்டை திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் திருச்சி ஆகிய மூன்று இடங்களில் செயல்முறை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon