ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா ரவி..!
பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி. அவர் இதற்கு முன்பு youtube சேனல் மூலம் பாப்புலர் ஆகி இருந்தாலும் கடந்த சில வருடங்களில் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
அந்த நேரத்தில் பிக் பாஸ் வாய்ப்பு வந்ததால் தற்போது ஷோவில் கலந்துகொண்டு இருக்கிறார்.இந்நிலையில் தற்போது பூர்ணிமா ரவி ஹீரோயின் ஆக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது.
செவப்பி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தை MS ராஜா இயக்க இருக்கிறார். ஆஹா ஓடிடி தளத்திற்காக அந்த படம் உருவாக இருக்கிறதாம்.





